உள்ளூர் செய்திகள்

கைவிடப்பட்ட போர்வெல்லில் மழைநீர் சேகரிப்பு: ஜல்சக்தி அமைச்சக விஞ்ஞானி ஆய்வு

திருப்பூர்: கைவிடப்பட்ட போர்வெல்லில் மழைநீர் சேகரிப்பு செய்வதன் வாயிலாக, நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது என, பெம் ஸ்கூல் மாணவர்களின் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது:பெம் ஸ்கூலில் உள்ள கிணறு, கடந்த, 2013ல் வற்றியது; லாரி தண்ணீர் வாங்கி பயன்படுத்தப்பட்டது. பின், 1,100 அடி, 800 அடியில் இரு போர்வெல் தோண்டியும் தண்ணீர் வரவில்லை. அவற்றை மூட இருந்த நிலையில், தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகி ஈஸ்வரன், இந்த போர்வெல்லில் மழைநீர் சேமிக்கும் வகையிலும், குழந்தைகள் விழாமல் இருக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்கலாம் என ஆலோசனை வழங்கினார்.அதன்படி, குறைந்த செலவில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தி, கடந்த, 10 ஆண்டாக கைவிடப்பட்ட அந்த போர்வெல்களில் மழைநீர் சேகரிக்கப்பட்டது. விளைவாக, கடந்த, 2 ஆண்டுகளில் பள்ளியில் உள்ள இரு கிணறுகளில் நீர்மட்டம், 40 மற்றும், 50 அடியாக உயர்ந்தது.இதனால், இரு ஆண்டுகளில், விலைக்கு வாங்கப்பட்ட தண்ணீரின் அளவு, 40 ஆயிரம் லிட்டரில் இருந்து, 10 ஆயிரம் லிட்டராக குறைக்கப்பட்டது. இந்த முயற்சியை பள்ளி 9ம் வகுப்பு மாணவிகள் தன்வந்தி, நிதர்ஷனா, சம்பீரித்தா, சத்வேகா, மேஹா ஆகியோர் இணைந்து ஆய்வுக்கட்டுரையாக தயாரித்தனர்.கைவிடப்பட்ட பேர்வெல்களில் மழைநீர் சேகரிப்பதால், நிலத்தடி நீர் மட்டம் உயரும்&' என்ற கருத்தை மையப்படுத்திய இந்த ஆய்வறிக்கையை, பிரதமர், முதல்வருக்கும் அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து நேரில் ஆய்வு செய்ய, மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் பரிந்துரை பேரில், சென்னை மண்டல விஞ்ஞானி சிங்கத்துரை, பள்ளிக்கு வந்திருந்தார். பள்ளியில் உள்ள போர்வெல் மற்றும் கிணற்றின் நீர்மட்டம் அளவெடுத்து சென்றார்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்