உள்ளூர் செய்திகள்

கனடாவில் இந்திய மாணவர் கொலை? துப்பாக்கி சூடு குறித்து விசாரணை!

ஒட்டவா: கனடாவில் இந்திய மாணவர் ஒருவர், காருக்குள் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஹரியானாவின் சோனிபாத் பகுதியைச் சேர்ந்தவர் சிராக் அண்டில், 24. இவர், பட்ட மேற்படிப்பு படிப்பதற்காக, வட அமெரிக்க நாடான கனடாவுக்கு 2022ம் ஆண்டு சென்றார்.குண்டு காயம்வான்கொயர் நகரில் தங்கியிருந்த அவர், அங்கிருந்த கனடா மேற்கு பல்கலையில் எம்.பி.ஏ., படித்து முடித்த நிலையில், சமீபத்தில் வேலை கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 12ம் தேதி வான்கொயர் நகரில், காரில் இறந்த நிலையில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் சிராக்கின் உடல் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டது.இது குறித்து போலீசார் கூறுகையில், இங்குள்ள 55வது அவென்யூவில் இரவு 11:00 மணிக்கு துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக அங்கிருந்தவர்கள் தகவல் அளித்தனர்.உடனே அங்கு சென்று பார்த்தபோது, துப்பாக்கி குண்டு காயங்களுடன் வாலிபர் ஒருவர், அங்கு நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.துப்பாக்கி குண்டு சத்தம் மட்டுமே கேட்கப்பட்டதால், அது கொலையா, தற்கொலையா என தெரியாத நிலையில், சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.எச்சரிக்கைஅமெரிக்கா மற்றும் சுற்றியுள்ள நாடுகளில் தொடர்ச்சியாக இந்திய மாணவர்கள் மர்மமான முறையில் இறந்து வருவது சமீபகாலமாக அதிகரித்து வரும் சூழலில், அங்கு தங்கி படிக்கும் இந்தியாவைச் சேர்ந்தவர்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்