உள்ளூர் செய்திகள்

இஸ்ரோ இளம் விஞ்ஞானி திட்டம் ஆச்சார்யா பள்ளி மாணவர் தேர்வு

புதுச்சேரி: இஸ்ரோவின், 'இளம் விஞ்ஞானி திட்டம்' நிகழ்ச்சிக்கு, வில்லியனுார் ஆச்சார்யா சம்பூர்ண வித்யாலயா பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இஸ்ரோவின் முன்னணி மையமான திருவனந்தபுரம், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில், இளம் விஞ்ஞானி திட்டம் - 2024 எனும் பெயரில் இரு வார குடியிருப்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் பங்கேற்க, இந்தியா முழுவதிலும் இருந்து மொத்தம், 350 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.வில்லியனுார், ஆச்சார்யா சம்பூர்ண வித்யாலயா பள்ளியின், 9ம் வகுப்பு மாணவர், சரணவக்குமார் இளங்கோ, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.பள்ளி மாணவர்களுக்கு விண்வெளியின் தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் பயன்பாடுகள் குறித்த அடிப்படை அறிவை வழங்க இந்த சிறப்புத் திட்டத்தை இஸ்ரோ ஏற்பாடு செய்துள்ளது. ஆச்சார்யா கல்விக்குழும தலைவர் அரவிந்தன், நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவரை பாராட்டி வாழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்