கவனத்தை சிதறடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகாதீர் மாணவ, மாணவியருக்கு கலெக்டர் அட்வைஸ்
கோவை: பிளஸ் 2 பொதுத்தேர்வில், 2023-24 கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. விழிப்புணர்வு கையேட்டை, மாணவர்களுக்கு கலெக்டர் கிராந்திகுமார் வழங்கினார்.பின், கலெக்டர் பேசியதாவது:பொருளாதார வசதி இல்லையெனில், தேவையான கல்வி கடன் பெறுவதற்கான வழிகாட்டுதல் வழங்கப்படும்.கோவையில் தொழிற்சாலைகள், கம்பெனிகள் அதிகமாக இருப்பதால் வேலைவாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. கலை மற்றும் அறிவியல் கல்லுாரி படிப்பு மட்டுமின்றி, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படிப்புகளும் படிக்கலாம்.இப்படிப்புக்கான செலவு குறைவாக இருக்கும்; 100 சதவீதம் வேலைவாய்ப்பு கிடைக்கும். சுயமாக தொழில் துவங்க இப்படிப்புகள் உதவியாக இருக்கும்.தொழில்நுட்ப, திறன் பயிற்சி பெற்ற பணியாளர்களையே தொழில் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கின்றன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் புதிய தொழில் துவங்க, 35 சதவீதம் அரசு மானியம், 65 சதவீதம் வங்கி கடனுதவி வழங்கப்படுகிறது.ஒரு மாணவர், எந்த சூழ்நிலையில் இருந்து வந்தாலும், முன்னேற்றம் அடைய பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன; அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புடன் படிப்பை நிறுத்தக் கூடாது; கட்டாயம் உயர்கல்வி கற்க வேண்டும்.எந்த வேலைக்குச் சென்றாலும், ஆரம்பத்தில் குறைவான ஊதியம் கிடைக்கும்; உங்களின் திறமை, செயல்பாடு சரியாக இருந்தால், உங்கள் திறமைகேற்ற ஊதியத்துடன் உயர்ந்த நிலைக்கு செல்லலாம். உங்கள் கவனத்தை சிதறடிக்கும் பழக்கங்களுக்கு அடிமையாகாமல், தற்காத்துக் கொள்ள வேண்டும்.அடுத்த, 3 அல்லது, 4 ஆண்டுகள் உங்கள் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தால், நிச்சயம் வெற்றி பெற முடியும்.இவ்வாறு, கலெக்டர் பேசினார்.கூட்டத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மணிமேகலை, மாவட்ட தொழில் மைய மண்டல மேலாளர் மகேஸ்வரி, தனி தாசில்தார் மாலதி உட்பட பலர் பங்கேற்றனர்.எந்த வேலைக்குச் சென்றாலும், ஆரம்பத்தில் குறைவான ஊதியம் கிடைக்கும்; உங்களின் திறமை, செயல்பாடு சரியாக இருந்தால், உங்கள் திறமைகேற்ற ஊதியத்துடன் உயர்ந்த நிலைக்கு செல்லலாம். உங்கள் கவனத்தை சிதறடிக்கும் பழக்கங்களுக்கு அடிமையாகாமல், தற்காத்துக் கொள்ள வேண்டும்.ஒரு மாணவர், எந்த சூழ்நிலையில் இருந்து வந்தாலும், முன்னேற்றம் அடைய பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன; அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புடன் படிப்பை நிறுத்தக் கூடாது; கட்டாயம் உயர்கல்வி கற்க வேண்டும்.