உள்ளூர் செய்திகள்

விஜய் ஏஸ் அகாடமி மாணவர்கள் நீட் தேர்வில் மாநில சாதனை

தர்மபுரி: தர்மபுரி, ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி குழுமத்தின் விஜய் ஏஸ் அகாடமி மாணவர்கள், மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். 2023- - 2024 கல்வியாண்டில் விஜய் ஏஸ் அகாடமியில், நீட் பயிற்சி பயின்ற, 200 மாணவர்களில், 75க்கும் மேற்பட்ட மாணவர்கள், தமிழகத்தின் முதன்மையான கல்லுாரிகளில் சேர்க்கை பெற உள்ளனர். மாணவர் மோனிகேஷ்வரன், 695 மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் சிறப்பிடமும், மாணவி மகாலட்சுமி, 664 மதிப்பெண்கள் பெற்று, தமிழக அரசின், 7.50 சதவீத இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும், 650க்கு மேல், 5 பேர், 600க்கு மேல், 20 பேர், 575க்கு மேல், 26 பேர், 550க்கு மேல், 33 பேரும் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, விஜய்ஸ் ஏஸ் அகாடமி நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு விழா நடந்தது. விழாவில், ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்விக்குழும தலைவர் இளங்கோவன் தலைமை வகித்து பேசினார். தாளாளர் மீனா இளங்கோவன், இயக்குனர்கள் பிரேம், சினேகா பிரவின், விஜய்ஸ் ஏஸ் அகாடமியின் மூத்த முதல்வர் நாராயணமூர்த்தி, இயக்குனர் கல்யாண்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்