உள்ளூர் செய்திகள்

ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி ரத்து: டில்லி ஐகோர்ட்டில் பூஜா கேத்கர் வழக்கு

புதுடில்லி: ஐ.ஏ.எஸ்., தேர்ச்சியை ரத்து செய்ததை எதிர்த்த டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் சர்ச்சை ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா கேத்கர்.மஹாராஷ்டிராவில் பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியாற்றி வந்த பூஜா கேத்கர் போலி சான்றிதழ் கொடுத்து தேர்வில் வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. சலுகைகளை பெற உடல் ஊனக் குறைபாடு உள்ளவர் என போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும், ஓபிசி வகுப்பு சான்றிதழை முறைகேடாக பெற்றதாகவும் பல்வேறு குற்றச்சாட்டு எழுந்தது.யு.பி.எஸ்.சி., விதிமுறைகளுக்கு மாறாக, அடையாளத்தை மறைத்தது என அடுத்தடுத்து புகார்கள் கிளம்பின. இதனையடுத்து அவரது ஐ.ஏ.எஸ்.தேர்ச்சியை பயிற்சி ரத்து செய்தது. மேலும் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம், இனி ஆணையம் நடத்தும் எந்த தேர்விலும் பங்கேற்க அவருக்கு நிரந்தர தடை விதித்துள்ளது.இதை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் பூஜா கேத்கர் வழக்கு தொடர்ந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்