உள்ளூர் செய்திகள்

பள்ளி கல்வி துறை இயக்குநர் தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

புதுச்சேரி: விடுமுறை நாட்கள், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் வகுப்புகள் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளி கல்வித் துறை எச்சரித்துள்ளது.இது தொடர்பாக பள்ளி கல்வித் துறை இயக்குநர் பிரியதர்ஷினி தனியார் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கை:புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள சில தனியார் பள்ளிகள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் வகுப்புகளை நடத்துவதாகவும், வார இறுதி விடுமுறை நாட்களிலும் வகுப்புகள் நடப்பதாகவும் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.இத்தகைய நடைமுறைகள் மாணவர்களுக்கு தேவையற்ற மன மற்றும் உடல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அவர்களுக்கு போதுமான ஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் முழுமையான வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் பறிக்கிறது.மாணவர்களின் நல்வாழ்வை உறுதி செய்ய, கல்வி துறையின் விதிமுறைகளை பள்ளிகள் கட்டாயம் கடை பிடிக்க வேண்டும்.எனவே, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள எந்த ஒரு தனியார் பள்ளியும் எந்த ஒரு வேலை நாளிலும் மாலை 6:00 மணிக்கு மேல் கல்வி அல்லது சாராத வகுப்புகளை நடத்தக்கூடாது.தனியார் பள்ளிகள், வார இறுதி நாட்களிலும், பொது விடுமுறை நாட்களிலும், புதுச்சேரி அரசால் அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களிலும் மாணவர்களை கல்வி சாராத அல்லது வேறு ஏதேனும் பள்ளி தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.பள்ளி நிர்வாகங்கள் இந்த அறிவுறுத்தல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இந்த உத்தரவை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்