உள்ளூர் செய்திகள்

இம்மாதம் இறுதிவரை அரசு பள்ளி ஆசிரியர்கள் வருகை கட்டாயம்

பெ.நா.பாளையம் : அரசு பள்ளியில் தேர்வுகள் முடிந்தாலும், அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் இம்மாதம், 30ம் தேதி வரை தொடர்ந்து பள்ளிக்கு வர வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.தொடக்க கல்வித்துறையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஏப்., 30ம் தேதி வரையில் பள்ளிக்கு வருகை தந்து, மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும் என, தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தொடக்க கல்வி துறையின் கீழ் பணியாற்றி வரும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பள்ளி இறுதி வேலை நாள் குறித்து, அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்களுக்கு, தொடக்க கல்வித்துறை அனுப்பிய அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.தொடக்கக் கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வுகள் நடந்து வருகின்றன. ஒன்று முதல், 3ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஏப்., 11ம் தேதி தேர்வுகள் முடிவடைந்தன. இதேபோல, 4,5 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஏப்.,17ம் தேதியுடன் தேர்வுகள் முடிந்தன. 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு ஏப்., 24ம் தேதி வரை தேர்வுகள் நடக்கிறது. ஆண்டு இறுதித் தேர்வு கால அட்டவணையில் குறிப்பிட்டபடி வகுப்புகள் வாரியாக தேர்வுகள் முடிந்த பின்னர் அந்த மாணவர்களுக்கு மட்டும் கோடை விடுமுறை என, அறிவிக்கப்பட்டுள்ளது.விடைத்தாள் மதிப்பீட்டு பணி, அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பணி உள்ளிட்ட நிர்வாக பணிகளுக்காக ஏப்., 30ம் தேதி வரை அனைத்து ஆசிரியர்களும், பள்ளிக்கு வருகை தர வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்