உள்ளூர் செய்திகள்

வங்கதேசத்துக்கு வரியை குறைத்த அமெரிக்கா; இந்திய ஜவுளி ஏற்றுமதியாளர்கள் கவலை

அமெரிக்கா - வங்கதேசம் இடையே உறுதிப்படுத்தப்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தம், இந்திய ஜவுளி மற்றும் ஆடை துறையில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.வங்கதேச தயாரிப்புகளுக்கான சுங்கவரி 20 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்க பருத்தி மற்றும் மனித தயாரிப்பு நாரிழையிலான ஆடைகளுக்கு வரி பூஜ்ஜியமானது கவலையை அதிகரித்துள்ளது.20 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக பரஸ்பர சுங்கவரி குறைப்பு, வங்கதேச ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதல் ஆதாயம் தரும் என்பது உறுதி. அதை விட முக்கியமாக, குறிப்பிட்ட ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதிகளுக்கு சுங்கவரி அறவே ரத்தாகி இருப்பது அந்நாட்டின் ஏற்றுமதியை கணிசமாக ஊக்குவிக்கும்.அமெரிக்கா - வங்கதேச வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில், இந்திய பங்குச்சந்தையில் அதன் தாக்கம் வெளிப்பட்டது. முன்னணி இந்திய ஜவுளி நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி கண்டன.கோகல்தாஸ் எக்ஸ்போர்ட்ஸ், கே.பி.ஆர்., மில், அர்விந்த், பெர்ல் குளோபல் இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் 5 சதவீதத்துக்கும் மேல் சரிந்தன.அமெரிக்காவுக்கான இந்திய ஆடை ஏற்றுமதிக்கு 18 சதவீத சுங்கவரி தொடரும். வங்கதேசம் 19 சதவீத வரியை சந்தித்தாலும், அமெரிக்க பருத்தி மற்றும் மனித தயாரிப்பிலான நாரிழையை பயன்படுத்தி, ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளிக்கு வரியே இல்லை என்பது, இந்திய நிறுவனங்களுடன் வங்கதேச நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்களின் போட்டித் திறனை முன்னிலைப்படுத்தும்.இதன் காரணமாக, அமெரிக்க ஆடை சந்தையில் வங்கதேசம் மீண்டும் விலைக்கான முன்னிலை பெறக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.இந்திய - அமெரிக்க ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட போது, இந்திய தயாரிப்புகளுக்கு விதிக்கப்படும் 18 சதவீத பரஸ்பர சுங்கவரி, நீண்ட காலமாக உள்நாட்டு ஏற்றுமதியாளர்கள் எதிர் கொண்டிருந்த பின்னடைவுகளை நீக்கி, வங்கதேசம் (20%), சீனா (30%), பாகிஸ்தான் (19%), வியட்நாம் (20%) போன்ற முக்கிய போட்டியாளர்களை பின்னுக்கு தள்ள இயலும் என இந்திய ஜவுளி அமைச்சகம், தெரிவித்தது.ஆனால், குறிப்பிட்ட வங்கதேச துணி மற்றும் ஆடை தயாரிப்புகளுக்கு முன்மொழியப்பட்டுள்ள பூஜ்ஜிய சுங்கவரி அணுகல், இந்த நம்பிக்கையை குறைத்துள்ளது.அச்சம் தேவையில்லை“அமெரிக்க பருத்தியில் உருவான வங்கதேச ஆடை இறக்குமதிக்கு மட்டுமே வரிச்சலுகை என, அமெரிக்கா அறிவித்துள்ளது. அதனால், இந்திய ஏற்றுமதியாளர் அச்சப்பட தேவையில்லை,” என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் சக்திவேல் தெரிவித்தார்.இந்திய ஜவுளி பொருட்களுக்கு, அமெரிக்காவில், 18 சதவீதம் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு, 30 - 35, வியட்நாம் - 20, பாகிஸ்தான் - 19 சதவீதம் என்ற அளவுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளை விட, இந்தியாவுக்கு வரி விகிதம் குறைவு.இதற்கிடையில், வங்கதேச ஆடைகளுக்கு, பூஜ்ஜிய வரிச்சலுகை அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்திருப்பது, புதிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, சக்திவேல் கூறுகையில், “வங்கதேசத்துக்கு, அமெரிக்காவில் பூஜ்ஜிய வரிச்சலுகை என தவறாக புரிந்து கொள்ளக்கூடாது. அமெரிக்காவில் விளையும் பருத்தியை இறக்குமதி செய்து, அதிலிருந்து ஆடை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் போது மட்டுமே இந்த பூஜ்ய வரிச்சலுகை பொருந்தும்.நமது வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் போது இந்தியாவுக்கான சலுகை கிடைக்குமா என்ற தெளிவு ஏற்படும். அது வரை, இந்திய ஏற்றுமதியாளர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை,” என்றார்.அமெரிக்காவில் இருந்து, பஞ்சு இறக்குமதி செய்து, அதில் உருவாகும் ஆடைகளை, மீண்டும் தங்களுக்கே ஏற்றுமதி செய்தால், பூஜ்ஜிய வரி என்று, அதிபராக பதவியேற்ற போதே டிரம்ப் அறிவித்திருந்தார். அதன் படியே, வங்கதேசம் அந்த வாய்ப்பை பெற்றுள்ளது என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க இணை செயலர் குமார் துரைசாமி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்