உள்ளூர் செய்திகள்

ரோபோட்டிக் மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வசதி துவக்கம்

மதுரை: மதுரை ஜெயம் மருத்துவமனையில் ரோபோட்டிக் மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் பகுதி மூட்டு மாற்று அறுவை சிகிச்சை (கோரி ரோபோட்டிக்) வசதியை உயர் நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கவுரி துவக்கி வைத்தார்.இதில் அரசு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ்குமார், டாக்டர்கள் கே.செந்தில், ஏ.ராஜாமணி, கே.ஜி. ஸ்ரீனிவாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.இம்மருத்துவனை நிறுவனர் ரவிச்சந்திரன், ஆர்த்ரோஸ்கோப்பி, ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் அரவிந்த் ஆகியோர் இத்தொழில்நுட்பத்தின் சிறப்புகள் குறித்து விளக்கினர். மேலும் அவர்கள், முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான வழக்கமான கட்டணத்துடன் ரோபோட்டிக் தொழில்நுட்பத்திற்கு என தனியாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. நவீன எலும்பியல் சிகிச்சை மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்