சி.பி.எஸ்.இ., கல்வியுடன் வேத பாடம் கற்க வாய்ப்பு
சென்னை: சென்னை ஆவடியை அடுத்த பருத்திப்பட்டு ஜெய்கோபால் கரோடியா வித்யாலயாவில், சி.பி.எஸ்.இ., கல்வியுடன் வேத பாடங்களை கற்கும் வகையில் ஒருங்கிணைந்த பள்ளி திறக்கப்பட்டுள்ளது.சென்னை ஆவடியை அடுத்துள்ள பருத்திப்பட்டில், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சார்பில் ஜெய்கோபால் கரோடியா வித்யாலயா பள்ளி இயங்குகிறது. இங்கு, புதிதாக ஒருங்கிணைந்த பாடத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தில் சேரும் குழந்தைகள் முழு நேரமாக விடுதியில் தங்கி, இலவசமாக சி.பி.எஸ்.இ., பள்ளி கல்வியை கற்க முடியும். அத்துடன், சமஸ்கிருதம், பஞ்சாங்கம், புரோகிதம் உள்ளிட்ட ஆன்மிக பயிற்சிகளையும் பெறலாம். பள்ளிப்படிப்பை முடித்த பின், உயர்கல்வி பெறவும் உதவித்தொகை வழங்கப்படும்.இது குறித்த மேலும் தகவல் அறிய, 73059 71770 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.