உள்ளூர் செய்திகள்

அங்கன்வாடி கட்டடங்கள் சேதம் சரி செய்ய குழு அமைக்கப்படுமா

விருதுநகர்: மாவட்டத்தில் அங்கன்வாடி மைய கட்டடங்களில் சேதம் அடைந்தவற்றை கண்டறிந்து சரி செய்ய குழு அமைக்கப்படுமா என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.விருதுநகர் மாவட்டத்தில் 2400 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு வட்டாரத்திற்கு 10 முதல் 15 மையங்கள் வாடகை கட்டடத்தில் என 12 வட்டாரங்களில் 120 முதல் 150 கட்டடங்கள் வரை வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன. இந்நிலையில் சொந்தமாக இயங்கும் சிலவற்றின் கட்டடங்கள் சேதமடைந்து வருகின்றன. இதனால் பெற்றோர், அங்கன்வாடி ஊழியர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். மாவட்டத்தின் சில பகுதிகளில் அங்கன்வாடி மையங்களின் கூரையின் சிமென்ட் பூச்சு பெயர்ந்து காணப்படுகின்றன.சில அங்கன்வாடிகள் சாக்கடை கழிவுகள் தேங்கும் நீர்வரத்து ஓடை அருகிலும் உள்ளன. இதனால் குழந்தைகளுக்கு கொசுத்தொல்லை ஏற்படுகிறது. மேலும் பல அங்கன்வாடி மையங்களில் ஏற்கனவே காலிப்பணியிடங்களால் சமையலர்களே ஆசிரியர் பணியை கூடுதல் பணியாக பார்க்கும் நிலையில், இது போன்ற கட்டட சேதம், சுகாதார குறைபாடுகளும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.இந்த கட்டடங்களுக்கு குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சேதமடைந்த கட்டடங்களை மராமத்து செய்யவும், கழிவுநீர் தேங்கும் வகையிலாக உள்ள பகுதிகளை சுத்தம் செய்யவும் எதிர்பார்க்கின்றனர். இதற்கென மாவட்ட நிர்வாகம் தாசில்தார் நிலையிலான அலுவலர்களை கொண்டு குழு அமைத்தால் சீரமைப்பு பணிகள் சரியாக நடக்கும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்