உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழா

கோத்தகிரி: கோத்தகிரியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஆண்டுவிழா, பணிநிறைவு ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா என, முப்பெரும் விழா நடந்தது.வட்டார செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். தலைவர் ஹேரிஉத்தம்சிங் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் முத்துராமசாமி கலந்து கொண்டு, பணிநிறைவுபெற்ற ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தி, நினைவுப் பரிசு வழங்கினார். மாவட்டத் தலைவர் அண்ணாதுரை, மாவட்டப் பொருளாளர் முரளி முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜ்குமார், வசந்தகுமாரி, ஓய்வுப்பிரிவு மாவட்ட தலைவர் நஞ்சன் உட்பட, 150 பேர் பங்கேற்றனர். வட்டார பொருளாளர் தேவராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்