தன்னார்வ சட்ட பணியாளர் சேவைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: நீதிபதி
கரூர்: கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவுக்கு, தன்னார்வ சட்ட பணியாளர் சேவை புரிய, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இதுகுறித்து, கரூர் மாவட்ட தலைமை நீதிபதி சண்முகசுந்தரம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் குளித்தலை, அரவக்குறிச்சி ஆகிய வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு, தன்னார்வ சட்டப்பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தற்காலிக பணிக்கு ஊதியம் இல்லை. கவுரவ ஊதியம் வழங்கப்படும். அதற்கான விண்ணப்பங்கள், கரூர் மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் இருந்து (https://karur.docourts.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் வரும், 17 க்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை, தலைவர், மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஏ.டி.ஆர்., கட்டிடம், பழைய நீதிமன்ற வளாகம், ஐந்து சாலை, கரூர், 639001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.