உள்ளூர் செய்திகள்

புதுச்சேரியில் தேசிய தர மதிப்பீட்டு குழு ஆய்வு

புதுச்சேரி: தாகூர் அரசு கல்லுாரியில் தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகார குழுவினர் இன்றும், நாளையும் ஆய்வு செய்கின்றனர்.இந்தியாவில், உள்ள உயர் கல்வி நிறுவனங்களான, பல்கலைக்கழகங்கள், கல்லுாரிகள் இவற்றின் தர நிலையை மதிப்பீடு செய்து, அந்நிறுவனங்களுக்கு அறிவிக்கும் தேசிய தரமதிப்பீடு மற்றும் அங்கீராக குழுவினர்கள் புதுச்சேரியில் முகாமிட்டுள்ளனர்.அவர்கள், லாஸ்பேட்டை தாகூர் அரசு கல்லுாரியில் இன்றும், நாளை 10ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர். அதில், கல்லுாரி உள்கட்டமைப்பு வசதிகள், மாணவர்கள் கல்வி கற்கும் சூழல் உள்ளிட்ட கல்லுாரியின் சிறப்பு அம்சங்கள் பற்றி ஆய்வு செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்