இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி: மாணவர்கள், பெற்றோர்கள் பேட்டி
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.தினமலர் நாளிதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் நடந்த இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள், பெற்றோர்கள் பேட்டி:சந்தேகங்களுக்கு தெளிவாக விடை கிடைத்ததுஷபரினா, செஞ்சி: இன்ஜினியரிங் கவுன்சிலிங் பற்றி இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கவுன்சிலிங் பற்றிய சந்தேகங்கள், எந்த கல்லுாரியை தேர்வு செய்வது. அதில் உள்ள பிளேஸ்மென்ட் முறைகள் பற்றி தெளிவாக விடை கிடைத்தது. இதை ஏற்பாடு செய்த 'தினமலர்' நாளிதழ் மற்றும் உறுதுணை புரிந்த சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.குழப்பத்தோடு வந்தேன்அக்ஷயா, திருக்கோவிலுார்: தெளிவோடு செல்கிறேன்கவுன்சிலிங் நிகழ்ச்சிக்கு வந்த பின்தான், இன்ஜினியரிங் பாடப்பிரிவில் என்னென்ன வகைகள் உள்ளது பற்றி தெரிந்து கொண்டேன். சாய்ஸ் பில்லிங் முறையை பற்றியும் அறிந்து கொண்டேன். இங்கு, இன்ஜினியரிங் கவுன்சிலிங் பற்றி கல்வி ஆலோசனை வழங்கியோர் மிகவும் சிறந்த முறையில் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்ததால், பல குழப்பத்தோடு வந்த நான் தெளிவோடு செல்கிறேன்.மோகனசங்கர், விழுப்புரம்: பெற்றோருக்கும் புரிய வைத்த தினமலர் நாளிதழுக்கு நன்றி. தினமலர் நாளிதழை படிப்பதன் மூலமே இந்த இன்ஜினியரிங் கவுன்சிலிங் நிகழ்ச்சி பற்றி எனக்கு தெரிந்தது. இங்கு, கவுன்சிலிங் சாய்ஸ் பில்லப், வேலை வாய்ப்பு திறனை எப்படி வளர்ப்பது பற்றி கல்வி ஆலோசகர் கூறியதன் மூலம் தெளிவு கிடைத்துள்ளது. இன்ஜினியரிங்கில் எந்த கல்லுாரி, பாடப்பிரிவை தேர்வு செய்து பயின்றால் வருங்காலத்தில் வருவாய் ஈட்டலாம் என தெரிந்து கொண்டேன். எனது பெற்றோரையும் இங்கு அழைத்து வந்து தெளிவு படுத்திவிட்டேன். இதற்கு காரணமான தினமலருக்கு நன்றி.சந்தேகங்களுக்கு தீர்வு கிடைத்ததுமகேந்திரமூர்த்தி, உளுந்துார்பேட்டை: இன்ஜினியரிங் கவுன்சிலிங் நிகழ்ச்சி, என்னைப் போன்ற பலரின் இன்ஜினியரிங் படிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு தினமலர் விடை வழங்கியுள்ளது. படிப்பது மட்டுமின்றி, எந்த ல்லுாரியை தேர்வு செய்வது. அதில் உள்ள பிளேஸ்மெண்ட் அறியும் முறை, ஆன்லைன் மூலம் விண்ணபிக்கும் போது யூசர் ஐ.டி., பாஸ்வோர்டை ரகசியமாக பாதுகாக்கும் முறை பற்றி தெரிந்து கொண்டேன். இதை தெளிவுபடுத்தும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து உதவிய, தினமலருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.கல்லுாரியை தேர்வு செய்வதுமுத்துக்குமார், கள்ளக்குறிச்சி: குறித்து அறிந்து கொண்டோம் தினமலர் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்திய இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி பிள்ளைகளுக்கு பயனுள்ள வகையில் இருந்தது. எங்களுக்கு, எந்த கல்லுாரியில் ஸ்காலர்ஷிப் கிடைக்கும் என்பது மட்டுமின்றி, நல்ல கல்லுாரியை தேர்வு செய்யும் முறைகள் பற்றியும் நாங்கள் அறிந்து கொண்டோம். மாணவர்களுக்கு மட்டுமின்றி, பெற்றோருக்கும் தெளிவுபடுத்திய தினமலருக்கு நன்றி.மகளை வெளியூர் கல்லுாரிக்குதேவி, மணலுார்பேட்டை: அனுப்ப தயாராகி விட்டேன்இன்ஜினியரிங் கவுன்சிலிங் விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் என் மகளை எங்கு சேர்ப்பது என தெளிவுபடுத்தி கொண்டேன். மகளை வெளியூர் கல்லுாரிக்கு எப்படி அனுப்புவது என குழப்பத்தோடு இருந்தேன். இங்குள்ள கல்வி ஆலோசகர் கூறியதை கேட்டு தெளிவு பெற்று, தைரியமாக என் மகளை வெளியூரில் நல்ல கல்லுாரியை தேர்வு செய்து சேர்க்க தயாராகி விட்டேன்.