உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் சமஸ்கிருத மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்: கவர்னர் ரவி

சென்னை: சமஸ்கிருத மொழியை கற்றுக்கொள்ளுங்கள் என மாணவர்களுக்கு தமிழக கவர்னர் ரவி வலியுறுத்தி பேசியுள்ளார்.சென்னை மயிலாப்பூரில் கல்வி குழுமம் ஒன்றின் 50வது ஆண்டு விழாவையொட்டி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசுகையில், இந்தியாவின் வளர்ச்சியை, ஆங்கிலேயர்கள், கிறிஸ்தவ மதபோதகர்கள் திட்டமிட்டு அழிக்க முயற்சித்தனர்.தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருத மொழிகளில் வல்லுனராக இருக்க வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது. எனவே சமஸ்கிருத மொழி ஒரு ஆதாரம், மாணவர்கள் அனைவரும் அம்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்