உள்ளூர் செய்திகள்

ரோபோ ஒலிம்பியாட் போட்டிகள் மாநகராட்சி மாணவர்கள் சாதனை

மதுரை: தேசிய ரோபோ ஒலிம்பியாட் 2024 போட்டிகளில் வெண்கலம் வென்ற மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களை மேயர் இந்திராணி பொன்வசந்த் பாராட்டினார்.சென்னையில் மண்டல போட்டிகளில் திரு.வி.க., பள்ளி மாணவர் ஸ்ரீ குமரன், வெள்ளிவீதியார் பள்ளி மாணவி சாதனா, பொன்முடியார் பள்ளி மாணவி ரூபிகா வெள்ளி பதக்கம் வென்று தேசியப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.குஜராத் அகமதாபாத்தில் நடந்த தேசிய போட்டியில் ஜூனியர் பிரிவில் இவர்கள் வெண்கலப் பதக்கம் வென்றனர். மாணவர்களை மேயர் இந்திராணி பொன்வசந்த் பாராட்டினார்.மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் ரகுபதி, அமெரிக்கன் இந்தியா அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர்கள் கவுசல்யா, முத்துமீனாட்சி, எச்.சி.எல்., ஒருங்கிணைப்பாளர் ராஜலட்சுமி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்