உள்ளூர் செய்திகள்

பகுதி நேர ஆசிரியர்கள் முன்பணம் வழங்க கோரிக்கை

விழுப்புரம் : பகுதிநேர ஆசிரியர்களுக்கு தீபாவளி முன் பணம் வழங்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர், தலைவர் முருகதாஸ் தலைமையில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட இயக்குநரை சந்தித்து அளித்த மனு:தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் தற்போது, 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மாதம் ரூ.12,500 என்ற தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் இவர்களுக்கு, வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகை திருநாள் வருவதால், அதனையொட்டி இந்த மாதத்திற்கான ஊதியத்தை முன் கூட்டியே வரும் 28 அல்லது 29ம் தேதியில் வழங்கி, பண்டிகையை கொண்டாட செய்ய வேண்டும். மேலும், தீபாவளி பண்டிகை முன் பணத்தை வழங்கி, அதனை பின் வரும் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்துகொள்ளவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்