அஞ்சல் கணக்கு தொடங்கும் குழந்தைக்கு பாராட்டு பத்திரம்
சேலம்: அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு தொடங்கும் குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சேலம் கிழக்கு கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் அறிக்கை:சேலம் கிழக்கு கோட்டத்தில் குழந்தைகள் இடையே சிறுசேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க, குழந்தைகளுக்கு சிறப்பு சேமிப்பு முகாம், அனைத்து அஞ்சல் அலுவலங்களில் நடக்கிறது. புதிதாக கணக்கு தொடங்கும், முதல், 100 குழந்தைகளுக்கு(3 வயதுக்குள்) பாராட்டு பத்திரம் வழங்கி கவுரவிக்கப்படுவர்.முகாமில் குழந்தைகளின் பெயரில் செல்வமகள் சேமிப்பு கணக்கு, சேமிப்பு கணக்கு, வருங்கால வைப்பு நிதி கணக்கு, தொடர் வைப்பு கணக்கு முதலிய திட்டங்களில் கணக்குகள் தொடங்கலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி குழந்தைகளுக்கு புதிதாக சேமிப்பு கணக்குகளை தொடங்கி, அவர்களுக்கு சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.