உள்ளூர் செய்திகள்

மக்கள் தொகைக்கு ஏற்ப நுாலகங்களை தரம் உயர்த்துங்க!

சேலம்: மக்கள் தொகைக்கு ஏற்ப நுாலகங்களை தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பொது நுாலகத்துறை நுாலகர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் சம்பத், சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய மனு:தேர்தல் வாக்குறுதிப்படி ஊர்புற நுாலகர்கள், 425 பேருக்கு மட்டும், 3ம் நிலை நுாலகர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மீதி, 988 பேர், 14 ஆண்டுகள் பணி நிறைவு செய்தும் காலி பணியிடம் இல்லை என, பதவி உயர்வு அளிக்காதது ஏற்புடையதல்ல. தமிழகத்தில் நுாலகங்கள் தரம் உயர்த்தப்பட்டு, 15 ஆண்டுகள் ஆகின்றன.மக்கள் தொகைக்கு ஏற்ப நுாலகங்களை தரம் உயர்த்த வேண்டும். அதனால் தாலுகா, டவுன் பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள முழு நேர நுாலகங்களை, முதல் நிலை நுாலகங்களாக தரம் உயர்த்தினால் மட்டுமே அதற்கு அடுத்தடுத்துள்ள, 3ம் நிலை, 2ம் நிலைகளில் காலி இடம் ஏற்பட்டு அனைவருக்கும் பதவி உயர்வு அளிக்கப்படும். 3ம் நிலை நுாலகர்கள், 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்தும், 2ம் நிலை நுாலகர் பதவி உயர்வு கிடைக்கவில்லை. இனியாவது அரசு நடவடிக்கை தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்