உள்ளூர் செய்திகள்

சீருடை பணியாளர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆணை

நாமக்கல்: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வில் வெற்றி பெற்ற, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, 25 பேருக்கு பணி நியமன ஆணை, நேற்று வழங்கப்பட்டது.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம், இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட, 3,359 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு சில மாதங்களுக்கு முன் நடந்தது. இந்த தேர்வில் வெற்றி பெற்ற-வர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட வாரியாக போலீஸ் எஸ்.பி., அலுவலகங்களில் நடந்தது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் வெற்றிபெற்ற, 25 பேருக்கு பணி நியமன ஆணைகளை, மாவட்ட ஏ.டி.எஸ்.பி., தனராசு வழங்கினார். பணி நியமன ஆணைகளை பெற்ற அவர்கள், திருச்சி மாவட்டம், நவல்பட்டியில் உள்ள போலீஸ் அகாடமியில், 6 மாதம் சிறப்பு பயிற்சி பெறுவர். அதன்பின், மாவட்டங்கள் அடிப்படையில் அவர்களுக்கு பணியிடம் ஒதுக்கப்படும் என, போலீஸ் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்