உள்ளூர் செய்திகள்

மதுரை அரசு மருத்துவமனையில் என்.ஐ.டி., பேராசிரியர்கள் ஆய்வு

மதுரை : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி மதுரை அரசு மருத்துவமனையை திருச்சி என்.ஐ.டி., பேராசிரியர்கள் ஆய்வு செய்தனர்.மருத்துவமனையின் புறநோயாளிகள் சீட்டும் பதியும் இடத்தின் மேற்பகுதியில் உள்ள கான்கிரீட் பூச்சு அக்டோபரில் பெயர்ந்து விழுந்தது. காலை 7:00 மணிக்கு நோயாளிகளோ பணியாளர்களோ இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது.இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து வழக்கு பதிந்தது. நீதிமன்ற பரிந்துரையின் பேரில் திருச்சி என்.ஐ.டி., சிவில் இன்ஜினியரிங் பிரிவு பேராசிரியர் முத்துகண்ணன், உதவி பேராசிரியர் சேவக ராஜ்கண்ணு கான்கிரீட் பூச்சு பெயர்ந்து விழுந்த பகுதியை ஆய்வு செய்தனர்.டீன் அருள் சுந்தரேஷ்குமார், ஆர்.எம்.ஓ., சரவணன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் செல்வராஜன், கண்காணிப்பு பொறியாளர் அய்யாசாமி, உதவி செயற்பொறியாளர் சண்முகம் உடனிருந்தனர்.கட்டடம் உறுதியாக இருந்தாலும் தண்ணீர் கசிவால் ஏற்பட்ட பிரச்னை குறித்து முதற்கட்ட ஆய்வு செய்தனர்.மொத்தமும் பழைய கட்டடம் என்பதால் அனைத்து கட்டடங்களின் உறுதித்தன்மையை பரிசோதிக்கும் வகையில் நவீன கருவிகளுடன் மீண்டும் ஆய்வு செய்ய குழுவினர் திட்டமிட்டுள்ளனர். டிச. 12க்குள் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்