உள்ளூர் செய்திகள்

சுற்றுச்சூழல் நிபுணர் மாதவ் காட்கிலுக்கு ஐ.நா., உயரிய விருது!

புதுடில்லி: சுற்றுச்சூழல் நிபுணர் மாதவ் காட்கில், 82, மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக்கு ஆற்றிய பணிக்காக, ஐ.நா.வின் உயரிய சுற்றுச்சூழல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக்கு ஆற்றிய பணிக்காக, சுற்றுச்சூழல் நிபுணர் மாதவ் காட்கிலுக்கு, ஐ.நா.வின் உயரிய சுற்றுச்சூழல் விருதான சாம்பியன்ஸ் ஆப் தி எர்த் விருதை ஐக்கிய நாடுகள் சபை இன்று அறிவித்துள்ளது.இந்தாண்டிற்கான விருது பெறுபவர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்தியராக மாதவ் காட்கில் உள்ளார்.காட்கில், அரசு அமைத்த மேற்கு தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழுவின் தலைவராக இருந்தார். இவரது குழு அளித்த அறிக்கை அடிப்படையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.விருது குறித்து மாதவ் காட்கில் கூறியதாவது:சரியானவற்றுக்காக நின்றதில் மகிழ்ச்சி. மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழு எழுதியது போன்ற அதிகாரப்பூர்வ அறிக்கையை, நேர்மையாக எழுதுபவர்கள் பலர் இல்லை. இந்த அறிக்கையானது, மிகவும் உறுதியான, தெளிவான படத்தை வெளிப்படுத்துகிறது. இது மக்களுக்குப் பார்க்கவும், புரிந்துகொள்ளவும் கிடைக்கிறது. அது பற்றி குறைந்தபட்சம் சில நல்ல, நேர்மையான விவாதங்களில் ஈடுபடுங்கள்.யாரும் எழுதாத இதுபோன்ற ஒரு அறிக்கையை எழுதியதில் நான் நிச்சயமாக மகிழ்ச்சியடைகிறேன். இந்த அறிக்கையால் மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.இதை கொண்டு வருவதில் நான் ஒரு கண்ணியமான பாத்திரத்தை வகித்தேன் என்று நான் நம்புகிறேன்.இவ்வாறு மாதவ் காட்கில் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்