மாணவியின் அசத்தல் பதிலும் அமைச்சரின் சிறப்புப் பரிசும்
கோவை: கோவையில் தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் சார்பில், மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கான வினாடி- வினா -வெற்றி போட்டி நடந்தது.நிகழ்ச்சியில், மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி, கவுரவித்தார். அவர் பேசும்போது, மாணவர்களாகிய நீங்கள், அரசு நமக்கு என்ன செய்கிறது எனத் தெரிந்து கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு தமிழக பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு எனத் தெரியுமா எனக் கேள்வியெழுப்பினார்.அதற்கு, செல்வபுரம் மேல்நிலைப்பள்ளி மாணவி துர்கா, 44 ஆயிரம் கோடி என பதில் சொல்லி அசத்தினார். மாணவியைப் பாராட்டிய அமைச்சர் செந்தில் பாலாஜி, சிறப்புப் பரிசாக, புத்தகம் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கி வாழ்த்தினார்.தலைமையாசிரியர்களுக்கு கவுரவம்மாணவர்களை சிறப்பாக வழிநடத்திய தலைமையாசிரியர்களைக் கவுரவிக்கும் வகையில், அவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. தினமலர் கோவை பதிப்பு செய்தியாசிரியர் விஜயகுமார், பட்டம் பொறுப்பாசிரியர் வெங்கடேஷ் விருது வழங்கி கவுரவித்தனர். விருதுபெற்ற தலைமையாசிரியர்கள், அமைச்சருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.