கணினி வழியில் செட் தேர்வு அரசு அறிவிப்பு
சென்னை: உதவி பேராசிரியர்களுக்கான மாநில தகுதி தேர்வான, செட் தேர்வை கணினி வழியில் நடத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வாயிலாக, செட் என்ற மாநில தகுதித்தேர்வை, அடுத்த மாதம் 6, 7, 8, 9ம் தேதிகளில், கணினி வழியில் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.தேர்வுக்கான நுழைவு சீட்டுகளை, www.trb.tn.gov.in என்ற இணையத்தில் இருந்து, இம்மாதம் 28ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.