முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை: முதுநிலை மருத்துவ படிப்புக்கான, நீட் தேர்வுக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியமான, என்.பி.இ.எம்.எஸ்., முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை, இரண்டு கட்டங்களாக கணினி வாயிலாக நடத்தி வருகிறது.நாடு முழுதும், மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள 52,000 இடங்களில் சேர, 2 லட்சத்துக்கும் அதிகமான எம்.பி.பி.எஸ்., முடித்த டாக்டர்கள், நீட் தேர்வுக்காக காத்திருக்கின்றனர்.நீட் தேர்வு எழுத, மே 7ம் தேதி வரை, https://natboard.edu.in/ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஜூன் 15 காலை 9:00 மணி முதல், பகல் 12:30 மணி வரை முதல் ஷிப்ட், மாலை 3:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை இரண்டாவது ஷிப்ட் தேர்வு நடக்க உள்ளது. தேர்வு முடிவுகள் ஜூலை 15ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.