விளையாட்டு பல்கலைக்கு நிதி; முதல்வர் ரேகா குப்தா தகவல்
புதுடில்லி: விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பா.ஜ., அரசு செய்து தரும் என முதல்வர் ரேகா குப்தா பேசினார்.புதுடில்லி டல்கொட்டாரா மைதானத்தில், டில்லி விளையாட்டு -2025 போட்டிகளை நேற்று துவக்கி வைத்து, முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது:விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பா.ஜ.. அரசு செய்து தரும். அப்படி செய்து கொடுத்தால்தான் அவர்களால் டில்லிக்கு பெருமை சேர்க்க முடியும். .முந்தைய அரசுகள் விளையாட்டு வீரர்களை புறக்கணித்ததால், டில்லியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், பிற மாநிலங்களில் பதிவு செய்து கொண்டனர். ஆனால், இப்போது டில்லி அரசு, டில்லி விளையாட்டு கவுன்சில் வாயிலாக அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர ஏற்பாடு செய்து வருகிறது.டில்லியின் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இடம்பெயராமல் இங்கேயே தங்கி, டில்லிக்கு பெருமை சேர்க்க வேண்டும்.டில்லியில் விளையாட்டு பல்கலை திறக்கும் திட்டத்தை, முந்தைய ஆம் ஆத்மி அரசு தடுத்து விட்டது. பா.ஜ., அரசு பொறுப்பேற்ற பின், அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.