உள்ளூர் செய்திகள்

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதனின் நூற்றாண்டு விழா

சென்னை: பசுமைப் புரட்சியின் தந்தையாகக் போற்றப்படும் பாரத ரத்னா, மறைந்த பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதனின் 100-வது பிறந்த நாள் விழா ஆகஸ்ட் 7 முதல் 9 வரை புதுடில்லியில் நடைபெறுகிறது. இந்த விழாவை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.இந்த நிகழ்வை முன்னிட்டு விழா குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.பசுமைப் புரட்சி - உயிரி அடிப்படையில் மகிழ்ச்சிக்கான பாதை என்ற கருப்பொருளில் ஆண்டு முழுவதும் நடைபெறும் விழா நிகழ்வுகளை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், இந்திய வேளாண் நிறுவனம், தேசிய வேளாண் அறிவியல் கல்வி நிறுவனம் மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.அறிவியலாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சமூக தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ள இந்த விழாவில், பேராசிரியர் சுவாமிநாதனின் நீடித்த விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கான பங்களிப்பு குறித்து விரிவான அமர்வுகள் இடம்பெறவுள்ளன.மாநாட்டில் பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் நவீன வேளாண் முறைகள், பல்லுயிர் பெருக்கம், பாலினம் சார்ந்த ஊட்டச்சத்து, சுகாதாரம், அறிவியல், மற்றும் இளையோரின் பங்களிப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் விவாதங்கள் நடைபெறவுள்ளன.விழாவின் ஒரு பகுதியாக இயற்கை விவசாயம் குறித்த கேள்வி-பதில் அமர்வும், மாநாட்டு கருப்பொருளை சார்ந்த பிரத்யேக நிகழ்ச்சிகளும் இடம்பெறும். இதில் தலைசிறந்த பேச்சாளர்கள் மற்றும் நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்