உள்ளூர் செய்திகள்

விக்சித் பாரத் யூத் பார்லிமென்ட் காந்திகிராம பல்கலையில் துவக்கம்

சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலையில் என்.எஸ்.எஸ்., அமைப்பு ,இந்திய அரசின் இளைஞர் நலன் விளையாட்டு அமைச்சகத்தின் 'மை பாரத்' திண்டுக்கல் அமைப்பு சார்பில் விக்சித் பாரத் யூத் பார்லிமென்ட் துவக்க விழா நடந்தது.துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார். மை பாரத் அமைப்பின் மாவட்ட இளைஞர் அலுவலர் சரண் கோபால் முன்னிலை வகித்தார். திண்டுக்கல் பிரிவு ஜி.எஸ்.டி., நிர்வாக உதவி கமிஷனர் வெங்கடசுப்பிரமணியன் முதன்மை விருந்தினராக பங்கேற்றார்.திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 18 முதல் 25 வயதிற்கு உபட்ட இளைஞர்கள், 50 ஆண்டுகள் இந்திய ஜனநாயகம், ஜனநாயகத்தின் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் உள்ளிட்ட தலைப்புகளில் பேசினர்.பங்கேற்பாளர்களின் செயல்திறன் நடுவர் குழுவினால் மதிப்பீடு செய்யப்பட்டது. சிறந்த 10 போட்டியாளர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.இதில் வெற்றி பெறும் போட்டியாளர்கள் இந்திய பார்லிமென்டில் உரையாற்றுவதற்கும், பிரதமரை சந்திப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்