அகார்கர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் லேப் அஸிஸ்டெண்ட் இடங்கள்
இந்திய அரசின் டிபார்ட்மெண்ட் ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி துறையின் நேரடி கட்டுப்பாடில் இயங்கும் அகார்கர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஒரு தன்னிலை பெற்ற ஆராய்ச்சி நிறுவனமாகும். 1946ல் மகாராஷ்டிரா அஸோசியேஷன் பார் கல்டிவேஷன் ஆப் சயின்ஸ் (எம்.ஏ.சி.எஸ்.,) ரிசர்ச் இன்ஸ்டியூட் என்று துவங்கப்பட்டு 1992ல் இந்த நிறுவனம் அகார்கர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் என்று இந்த நிறுவனத்தின் நிறுவனரின் பெயருக்கு மாறியது. இந்த நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் லேப் அஸிஸ்டெண்டுகளை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. என்ன தேவை:ஒப்பந்த அடிப்படையிலான லேப் அஸிஸ்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும், இவர்கள் தாவரவியல், பயோடெக்னாலஜி, விவசாயம் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முதல் வகுப்புடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்பது எப்படி:மேற்கண்ட தகுதி உடையவர்கள் முதலில் ரூ.50/க்கான டி.டி.,யை Agharkar Research Institute, Pune, என்ற பெயரில் புனேயில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். பின்னர் பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியில் விண்ணப்பத்தை நிரப்பி, பின் வரும் முகவரிக்கு 08.07.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். இந்த நிறுவனத்திற்கு வரும் விண்ணப்பங்கள் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு தகுதி உடையவர்களுக்கு மட்டும் நேர்காணலுக்கான அழைப்பு அனுப்பப்படும். முழுமையான விபரங்களுக்கு இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும். முகவரி:MACS & AGHARKAR RESEARCH INSTITUTE(An Autonomous Institute of Dept. of Science & Technology,Govt. of India)G.G.AGHARKAR ROAD, PUNE - 411004 இணையதள முகவரி: http://www.aripune.org/ விண்ணப்பங்கள் கிடைக்க இறுதி நாள்: 08.07.2011