பயணம் மற்றும் சுற்றுலா ஆலோசனை படிப்பு
குவானி அகாடமி கடந்த 2003ம் ஆண்டு துவக்கப்பட்டது; இது, பயணம் மற்றும் சுற்றுலா தொடர்பான சேவைத் துறையில் சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது. IATA நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் இப்படிப்பு பல்வேறு படிநிலைகளாக நான்கு முதல் ஆறு மாதங்கள் என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது. சுற்றுலாத்துறையில் தேவையான திறன்களை வளர்க்கும் விதத்தில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சிபெறுபவர்கள் முன்னணி பயண ஏற்பாட்டாளர்கள், சுற்றுலா நிறுவனங்களான Cox& Kings, Make My Trip போன்றவற்றில் பணியமர்த்தப்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் விவரங்களுக்கு www.kuoniacademy.co.in என்ற இணையதளத்தை அணுகலாம்.