புதிய மாணவர் சேர்க்கை அரசு பள்ளிக்கு பாராட்டு
சென்னை: அதிகமான எண்ணிக்கையில் புதிய மாணவ, மாணவிகளை சேர்த்து முதலிடம் பிடித்த மேடவாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு சுழற்கேடயம் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் புனித தோமையார்மலை ஊராட்சி ஒன்றிய ஆசிரியர் நலமன்றம் சார்பில், ஆசிரியர் தினவிழா, ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் நலமன்ற ஆண்டு விழா ஆகியவை பல்லாவரத்தில் செப்., 7ம் தேதி நடந்தது. சிறப்பு விருந்தினராக மாநிலக் கல்லூரி தமிழ் இணைப் பேராசிரியர் கலந்து கொண்டு, இந்த ஆண்டில் 171 புதிய மாணவ, மாணவிகளை சேர்த்து முதலிடம் பிடித்த மேடவாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு சுழற்கேடயம் வழங்கி, பேசினார். பள்ளி தலைமை ஆசிரியை ஆனக்ஸ் சேவியர் கேடயத்தை பெற்றுக்கொண்டார்.