உள்ளூர் செய்திகள்

ஆந்திராவில் தனியார் பொறியியல் கல்லூரிகளை மூடும் நிலை

ஆந்திராவில் சுமார் 720க்கும் மேற்பட்டபொறியியல் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதன்மூலம் பல லட்சக்கணக்‌கான மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர். இந்நிலையில் மறைந்த முன்னாள்முதல்வர் ராஜசேகர ரெட்டி பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்படி பிளஸ்2 -வில் 75 சதவீத வருகைப்பதிவும், 50 சதவீத மார்க்‌குகளும் இருந்தால் ‌போதும், எளிதில் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து விடலாம். இந்த திட்டத்தை தற்போதைய கிரண்குமார் ரெட்டி அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. ஏற்க‌னவே நிதி நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் தனியார் பொறியியல் கல்லூரி நிறுவனங்கள் அரசின் முடிவு கண்டு அதிர்ச்சியடைந்துள்ளது. இதனையடுத்து அடுத்த கட்ட நடவடிக்க‌ையாக ஐதராபாத் நகரை சுற்றியுள்ள சுமார் 75 கல்லூரிகளில், 50 கல்லூரிகள் வரை மாணவர்கள் சேர்க்கையை நிறுத்திவிட்டு கல்லூரிகள‌ை விற்பனை செய்யும் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்