உள்ளூர் செய்திகள்

பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் பயிற்சி முகாம்

திருநெல்வேலி: நெல்லையில் பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் 2 நாள் பயிற்சி முகாம் துவங்கியது. பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் இரண்டு நாள் பயிற்சி முகாம் துவக்க விழா மதிதா இந்து மேல்நிலைப்பள்ளியில் துவங்கியது. கல்வி சங்க செயலாளர் ஏ.எல்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் செல்லையா முன்னிலை வகித்தார். இந்த பயிற்சி முகாமில் நெல்லை கல்வி மாவட்டத்தில் 31 உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் இருந்து 384 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். முகாமில் மாணவர்களை நல்வழிப்படுத்துதல், நேர்மையான வழியில் செல்லும்படி ஊக்குவித்தல், கயிறு முடிச்சுகள் செய்வது, லம் போடுதல், கைவினை பொருட்கள் செய்தல் போன்ற பல்வேறு விதமான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்