உள்ளூர் செய்திகள்

பாரதியார் பல்கலையுடன் மால்தா பல்கலை புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை: பாரதியார் பல்கலையுடன், மால்தா தீவில் உள்ள மால்தா பல்கலை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளது. பாரதியார் பல்கலை துணைவேந்தர் திருவாசகம் கூறியதாவது:மால்தா என்பது தனி தீவு; நான்கு லட்சம் பேர் மட்டுமே வசிக்கின்றனர். இங்கு, மால்தா பல்கலை மட்டுமே  உள்ளது. இதில் 12 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பல்கலை, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலுள்ள பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த பல்கலைகளுக்கு இடையே மாணவர் பரிமாற்றம், ஆசிரியர் பரிமாற்றம் நடந்து வருகிறது. மேலாண்மை, கம்ப்யூட்டர் அறிவியல், உயிர் தொழில்நுட்பம் ஆகிய மூன்று பாடப்பிரிவுகளில் கவனம் செலுத்த மால்தா பல்கலை முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, கோவை பாரதியார் பல்கலையுடன், நவம்பர் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யவுள்ளது. இரு நாட்களுக்கு முன், மால்தா தீவில் உள்ள இந்தியாவுக்கான வெளிநாட்டு தூதர் வின்பிரட் கென்லே மற்றும் அதிகாரிகள் 14 பேர், பாரதியார் பல்கலைக்கு வந்தனர். இங்குள்ள துறைகளுக்குச் சென்று ஆய்வு செய்தனர். பின், பாரதியார் பல்கலை ஆசிரியர்கள், மால்தா சென்று பாடம் நடத்த வேண்டும்; அங்குள்ள பல்கலை ஆசிரியர்கள், பாரதியார் பல்கலையில் ஆராய்ச்சி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இவ்வாறு துணைவேந்தர் திருவாசகம் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்