உள்ளூர் செய்திகள்

வறுமையை ஒழிக்கும் கருவி ‘கல்வி’: பிரதீபா பாட்டீல்

நாடு முழுவதிலும் நிர்மல் கிராம புரஷ்கார் விருது பெற்ற 13 மாநிலங்களைச் சேர்ந்த பஞ்சாயத்துகளுக்கு விருது வழங்கும் விழா அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்தது. 100 சதவீத சுகாதர வசதி பெற்ற கிராமங்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. விருது வழங்கி, ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பேசியதாவது: சுகாதாரமற்ற நீரை குடிப்பது, பல்வேறு விதமான நோய்களுக்கு வித்திடுகிறது. இது வளரும் நாடுகளில் குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் பல சமூக சீர்கேட்டிற்கு வழிவகுக்கிறது. இதுகுறித்து கிராமப் பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த சமுதாய மேம்பாட்டு நிகழ்ச்சிகள் அதிகளவில் நடத்தப்பட வேண்டும். இந்த தகவல்களை பள்ளிகளில் கற்கும் மாணவ, மாணவியர் தங்களது வீட்டில் இருப்பவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். மாணவியர் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுவதற்கு பள்ளிகளில் நிலவும் சுகாதார குறைபாடே முக்கிய காரணம். நாடு வளர்ச்சி அடைவதற்கு பெண் குழந்தை கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு கிராம பஞ்சாயத்துகள் செயல்பட வேண்டும். மொத்தம் 32 லட்சம் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளைக் கொண்ட இந்தியா, உலக அரங்கில் மிகப் பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல; அதிக பிரதிநிதித்துவ ஜனநாயக நாடும் ஆகும். கிராமப்புற மேம்பாட்டில் புரட்சி ஏற்படுத்த, இந்த பிரமாண்ட எண்ணிக்கை போதும். இவ்வாறு ஜனாதிபதி பாட்டீல் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்