உள்ளூர் செய்திகள்

சர் தியாகராயா கல்லூரியில் பொருளியல் மன்ற ஆண்டுவிழா!

சென்னை: வண்ணாரப்பேட்டை, சர் தியாகராயா கல்லூரியின், முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் பொருளியல் துறையின் சார்பாக, "பொருளியல் மன்ற" ஆண்டு விழா, மார்ச் 1ம் தேதி, சிறந்த முறையில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறைத் தலைவர் முனைவர் A.R.வீரமணி கலந்துகொண்டார். அவர், "இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் மாணவர்களின் பங்கு" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இவ்விழாவில், பொருளியல் துறைத்தலைவர் முனைவர் M.பாண்டியன், சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்திப் பேசினார். கல்லூரி முதல்வர் முனைவர் A.குணசேகரன், தலைமை உரையாற்றினார். பொருளாதாரத் துறையின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்ட இவ்விழாவில், ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கு, நினைவுப் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்