கால்நடை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு
சென்னை: கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு, ஆகஸ்ட் 23, 26 மற்றும் 27ம் தேதிகளில் நடைபெறுகிறது. சென்னையிலுள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இந்த கலந்தாய்வு நடைபெறவுள்ளது. மொத்தம் 280 காலியிடங்களுக்கு, இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது. இதுதவிர, மீன்வள அறிவியல் துறையில் உள்ள 34 காலியிடங்களுக்கும் சேர்த்து கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.