தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக சீராய்வுக்குழு முதல்வரிடம் அறிக்கை!
பேராசிரியர் மு.ஆனந்தகிருஷ்ணன் தலைமையிலான இந்த சீராய்வுக் குழுவில் சிலம்பொலி செல்லப்பன் மற்றும் தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் அறநிலையத் துறைச் செயலாளர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தை மறுசீரமைப்புச் செய்து மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் புதிய துறைகள் மற்றும் மையங்களை உருவாக்குதல், மறுசீரமைப்பு செய்தல் மற்றும் மேம்படுத்துதல், செம்மொழித் திட்டத்தின் கீழ் நிதி ஆதாரங்களைப் பெறுதல் போன்றவை குறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.