உள்ளூர் செய்திகள்

மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி

சென்னை மாவட்ட மெட்ரிக்., பள்ளிகளின் முதல்வர்களுக்கு, ஒரு நாள் புத்தாக்க பயிற்சி நடத்தப்பட்டது. எழும்பூர் டான் பாஸ்கோ மெட்ரிக்., பள்ளியில் நடந்த பயிற்சியை, மெட்ரிக்., பள்ளிகள் இயக்குனர் மணி துவக்கி வைத்தார். இணை இயக்குனர் பிச்சை முன்னிலை வகித்தார். சென்னை மாவட்ட மெட்ரிக்., பள்ளிகள் ஆய் வாளர் தமிழ்மணி வரவேற்றார். ‘பள்ளியின் வளர்ச்சி’ என்ற தலைப்பில், சுற்றுலாத்துறை செயலர் இறையன்பு பேசினார். அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர் செல்வம் உள்ளிட்ட பலர், மெட்ரிக்., பள்ளிகளின் முதல்வர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து பேசினர். கடந்த 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில், சென்னை மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு இயக்குனர் மணி பரிசுகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்