உள்ளூர் செய்திகள்

ரயில்வே தேர்வு: தேர்வர்களுக்காக சிறப்பு ரயில் ஏற்பாடு

நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட உள்ள ரயில்வே தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளை (ஜூலை 13ம் தேதி) மும்பை சி.எஸ்.டி. ரயில் ஸ்டேசனிலிருந்து மாலை 04.40 மணிக்கு புறப்படும் ரயில் (ரயில் எண் 01097)14ம் தேதி காலை 8 மணிக்கு நாக்பூரை சென்றடையும், மறுமார்க்கத்தில் 14ம் தேதி காலை 11மணிக்கு நாக்பூரிலிருந்து புறப்படும் ரயில்(ரயில் எண் 01098)இரவு 11.50 மணியளவில் மும்பை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்