உள்ளூர் செய்திகள்

கராத்தே போட்டியில் கமுதி பள்ளி மாணவர் முதலிடம்

கமுதி: உலகளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் கமுதி பள்ளி மாணவர் முதலிடம் பிடித்தார். உலகளவில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா உட்பட 10க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இப்போட்டியானது 6-8, 8-9, 15-18 வயது உட்பட 12வகையான பிரிவுகளாக நடத்தப்பட்டது. இப்போட்டியில் கமுதி ரஹ்மானியா மேல்நிலைப் பள்ளியை சார்ந்த மாணவர் சந்துரு 8-9 வயதுக்கான பிரிவில் உலகளவில் முதலிடமும், 9-10 வயதுக்கான போட்டியில் அதே பள்ளியைச் சார்ந்த பருதிமுத்துருகன் இரண்டாம் இடமும், காளிவேந்தன் மூன்றாம் இடமும் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்