அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்களின் கலை விழா!
ஆண்டிபட்டி: தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்களின் கலை விழா நடந்தது. முதல் நாள் விழாவில் சொற்போர், ஓவியம் தீட்டுதல், இசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, கவிதை, கட்டுரை எழுதுதல், புகைப்படம் எடுத்தல் ஆகிய போட்டிகள் நடந்தன. இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் ஜோடி நடனம், குழு நடனம், சிகை அலங்காரம், முக ஓவியம், டூயட் பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன. நிறைவு நாள் நிகழ்ச்சியில் குழு பாடல், விளம்பரம் தயாரித்தல், டி-சர்ட் வடிவமைத்தல், கோலப்போட்டி, சமையல் போட்டி, பானை ஓவியம், வார்த்தை விளையாட்டு, குறும்படம், புதையல் வேட்டை, தனி நடனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.