உள்ளூர் செய்திகள்

மாநில தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்கள்

கோபி: மாநில தடகள போட்டியில் நம்பியூர் குமுதா மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் இரண்டு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றனர். தமிழ்நாடு அளவிலான குடியரசு தினவிழா தடகள விளையாட்டு போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் டாக்டர் எம்.ஜி.ஆர்., விளையாட்டு அரங்கில் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் போட்டியில் பங்கேற்றன. கோபி கல்வி மாவட்டம், நம்பியூர் குமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ப்ளஸ்-2 மாணவி சந்தியா, 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 1,500 மீட்டர் ஓட்டம் போட்டியில் இரண்டாமிடத்தையும் பெற்றார். எஸ்.எஸ்.எல்.சி., மாணவன் கிருபாகர், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில், 1500 மீட்டர் ஓட்டபோட்டியில் முதலிடம் பெற்றார். சந்தியா, கிருபாகரன் ஆகியோர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடக்கும் தேசிய அளவிலான தடகள போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்