திருப்பூர் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி
திருப்பூர்: திருப்பூர் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில், மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்று அசத்தினர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருப்பூர் கிளை சார்பில், கல்வி மாவட்ட அளவில், உலக திறனாய்வாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள், செஞ்சுரி பவுண்டேசன் பள்ளியில் நடைபெற்றது. 6 முதல் 8ம் வகுப்பு வரை, மாணவ, மாணவியருக்கு தனித்தனியே ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமலிங்கம், போட்டிகளை துவக்கி வைத்தார். மாணவியர் பிரிவு (6 வகுப்பு) 100 மீ., ஓட்டத்தில், சுப்பையா பள்ளியின் அன்னிகா ஜோலைன் முதலிடம், கார்மல் பள்ளியின் தரணி 2ம் இடம், சுப்பையா பள்ளியின் திருமகள் 3ம் இடம். 200 மீ., ஓட்டத்தில், சாரதா வித்யாலயாவின் துர்கா முதலிடம், திருவள்ளுவர் பெண்கள் பள்ளியின் ஜெயஸ்ரீ 2ம் இடம், கார்மல் பள்ளியின் 3ம் இடம். 400 மீ., ஓட்டத்தில், சாரதா வித்யாலயாவின் பானுஸ்ரீ முதலிடம், கார்மல் பள்ளியின் ஷாலினி 2ம் இடம், வி.கே., அரசு பள்ளியின் அஷ்மிதா 3ம் இடம். நீளம் தாண்டுதலில், கார்மல் பள்ளியின் வேதாநாயகி முதலிடம், ஜெசீஸ் பள்ளியின் ஜெயஅபிராமி 2ம் இடம், கார்மல் பள்ளியின் இந்துபிரபா 3ம் இடம். உயரம் தாண்டுதலில், சசூரி வித்யாபவன் ஸ்ரீகா முதலிடம்; ஜெய்வாபாய் பள்ளியின் விசாலி 2ம் இடம், அதே பள்ளியின் ஷோபனா 3ம் இடம். குண்டு எறிதலில், ஜெசீஸ் பள்ளியின் சவுபர்னிகா முதலிடம், திருப்பூர் அரசு பள்ளி மாணவி கிருஷ்ணவேணி 2ம் இடம், பிரண்ட்லைன் பள்ளியின் வித்யவிகாசினி 3ம் இடம். மாணவியர் பிரிவு (7வகுப்பு) 100 மீ., ஓட்டத்தில் கார்மல் பள்ளியின் வினோதினி முதலிடம்; ஜெய்வாபாய் பள்ளியின் செல்வியா 2ம் இடம், புனித அமல அன்னை பள்ளியின் துளசி கவுரி 3ம் இடம். 200 மீ., ஓட்டத்தில், செஞ்சுரி பள்ளியின் ஹரீஷா முதலிடம்; கார்மல் பள்ளியின் வினோதினி 2ம் இடம். ஜெய்வாபாய் பள்ளியின் யமுனா 3ம் இடம். 400 மீ., ஓட்டத்தில் செஞ்சுரி பள்ளியின் ஹரீஷா முதலிடம், சாரதா வித்யாலயாவின் ஜெனிபர் 2ம் இடம், கார்மல் பள்ளியின் நந்தினி 3ம் இடம். நீளம் தாண்டுதலில் கார்மல் பள்ளியின் கோபிகா முதலிடம், வி.கே., பள்ளியின் சுவாதிகா 2ம் இடம், எம்.என்.எம்.சி., பெண்கள் பள்ளியின் சுவேதா 2ம் இடம். உயரம் தாண்டுதலில், கார்மல் பள்ளியின் கோபிகா முதலிடம், விவேகானந்தா பள்ளியின் சுவாதிகா 2ம் இடம், ஜெய்வாபாய் பள்ளியின் கோகிலவாணி 3ம் இடம். குண்டு எறிதலில், கார்மல் பள்ளியின் திவ்யலட்சுமி முதலிடம், அதே பள்ளியின் ஸ்ரீவித்யா 2ம் இடம், கே.ஜி.எஸ்., பள்ளியின் தரணி 3ம் இடம். மாணவியர் பிரிவு (8 வகுப்பு) 100 மீ., ஓட்டத்தில், செஞ்சுரி பள்ளியின் யாஷிகா முதலிடம்; நெசவாளர் காலனி பள்ளி மாணவி வைஷ்ணவி 2ம் இடம், சாந்திநிகேதன் பள்ளி பிரீத்தா 3ம் இடம். 200 மீ., ஓட்டத்தில், செஞ்சுரி பள்ளி யாஷிகா முதலிடம்; நெசவாளர் காலனி பள்ளி வைஷ்ணவி 2ம் இடம், கார்மல் பள்ளி தேவிஜா 3ம் இடம். 400 மீ., ஓட்டத்தில், கார்மல் பள்ளி சாதனா முதலிடம், சாரதா வித்யாலயா பள்ளி ஜெபராணி 2ம் இடம், இடுவம்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வினோதினி 3ம் இடம். நீளம் தாண்டுதலில், பொங்கலூர் பி.வி.கே.என்., பள்ளி அருள் பிரீத்தியா முதலிடம்; கார்மல் பள்ளியின் பவித்ரா 2ம் இடம், எம்.என்.எம்.சி., பள்ளி சுவேதா 3ம் இடம். உயரம் தாண்டுதலில், ஜெய்வாபாய் பள்ளி அனிதா முதலிடம், பழனியம்மாள் பள்ளி சந்தியா 2ம் இடம், முருகப்ப செட்டியார் பள்ளி சினேகா 3ம் இடம். குண்டு எறிதலில், எம்.என்.எம்.சி., பள்ளி சந்தியா முதலிடம், சாரதா வித்யாலயா பள்ளியின் இசைவாணி 2ம் இடம், கார்மல் பள்ளி தீபிகா 3ம் இடம். மாணவர் பிரிவு (6ம் வகுப்பு) 6ம் வகுப்பு மாணவர்களுக்கான 100 மீ., ஓட்டத்தில், சுப்பையா பள்ளி விகாஸ் முதலிடம்; நஞ்சப்பா பள்ளி சஞ்சய் குமார் 2ம் இடம், பத்மாவதிபுரம் அரசு பள்ளி கோபாலகிருஷ்ணன் 3ம் இடம் 200 மீ., ஓட்டத்தில், செஞ்சுரி பள்ளி முகமதீஷா முதலிடம்; நெசவாளர் காலனி பள்ளி நவீன்சுதர்ஷன் 2ம் இடம்; பெர்ம் பள்ளி ராகுல் 3ம் இடம். 400 மீ., ஓட்டத்தில், செஞ்சுரி பள்ளி முகமதீஷா முதலிடம்; திருமுருகன் மெட்ரிக் பள்ளி கார்த்திக் 2ம் இடம்; சாரதா வித்யாலயா ஸ்ரீகாந்த் 3ம் இடம். நீளம் தாண்டுதலில், சுப்பையா பள்ளி ரிஷிகேஷன் முதலிடம்; லிட்டில் பிளவர் பள்ளி திஷால் 2ம் இடம்; பெர்ம் பள்ளி அபிஷேக் 3ம் இடம் பிடித்தனர். உயரம் தாண்டுதலில், பிரண்ட் லைன் பள்ளி மனீஸ் முதலிடம்; சாரதா வித்யாலயா தீபன்குமார் 2ம் இடம்; பிரண்ட்லைன் பள்ளி ஸ்ரீகாந்த் 3ம் இடம். குண்டு எறிதலில், சாரதா வித்யாலயா பிரவீன் குமார் முதலிடம்; செஞ்சுரி பள்ளி தனீஸ் 2ம் இடம்; இடுவம்பாளையம் அரசு பள்ளி சரவண குமார் 3ம் இடம். மாணவர் பிரிவு (7ம் வகுப்பு) 100 மீ., ஓட்டத்தில், செஞ்சுரி மெட்ரிக் அப்சர் அகமது முதலிடம்; கே.ஜி.எஸ்., மெட்ரிக் ரங்கராமானுஜம் 2ம் இடம்; திருமுருகன் மெட்ரிக் மணிகண்டன் 3ம் இடம். 200 மீ., ஓட்டத்தில், செஞ்சுரி பள்ளி அப்சர் அகமது முதலிடம்; கே.ஜி.எஸ்., பள்ளி ரங்கராமானுஜம் 2ம் இடம்; திரு முருகன் பள்ளி மணிகண்டன் 3ம் இடம். 400 மீ., ஓட்டத்தில், பிரண்ட் லைன் பள்ளி அபிநிவாஸ் முதலிடம்; பெர்ம் பள்ளி தனபாலன் இரண்டாமிடம்; வி.கே., அரசு பள்ளி அப்துல்ரஹ்மான் 3ம் இடம். நீளம் தாண்டுதலில், செஞ்சுரி பள்ளி தினேஷ் முதலிடம்; வி.கே., அரசு பள்ளி அப்துல்ரஹ்மான் 2ம் இடம்; சாரதா வித்யாலயா திவாகர் 3ம் இடம். உயரம் தாண்டுதலில், சாரதா வித்யாலயா கருப்புசாமி முதலிடம்; திருமுருகன் பள்ளி கவுதம் இரண்டாமிடம்; திருவள்ளுவர் பள்ளி ஹரிசுதன் 3ம் இடம். குண்டு எறிதலில், திருமுருகன் பள்ளி கவுதம் முதலிடம்; சாரதா வித்யாலயா பள்ளி சுகந்த்குமார் 2ம் இடம்; பெர்ம் பள்ளி மிதுன்ராகவ் 3ம் இடம். மாணவர் பிரிவு (8ம் வகுப்பு) 100 மீ., ஓட்டத்தில் லிட்டில் பிளவர் பள்ளி தீபகுமார் முதலிடம்; சசூரி பள்ளி ஸ்ரீஹரி 2ம் இடம். பொங்கலூர் பி.வி.கே.என்., பள்ளி பரணிகுமார் 3ம் இடம். 200 மீ., ஓட்டத்தில், சுப்பையா மெட்ரிக் அஜய் முதலிடம்; எஸ்.எல்.என்., மெட்ரிக் பள்ளி நவீன்குமார் 2ம் இடம்; லிட்டில் பிளவர் பள்ளி நித்தின் 3ம் இடம். 400 மீ., ஓட்டத்தில், சுப்பையா மெட்ரிக் விக்ரமன் முதலிடம்; அதே பள்ளியை சேர்ந்த அபிஷேக் 2ம் இடம்; இடுவம்பாளையம் அரசு பள்ளி தினேஷ் 3ம் இடம். நீளம் தாண்டுதலில், லிட்டில் பிளவர் பள்ளி தீபக்குமார் முதலிடம்; சசூரி பள்ளி ஸ்ரீஹரி 2ம் இடம். பி.வி.கே.என்., பள்ளி பரணி குமார் 3ம் இடம். உயரம் தாண்டுதலில், ஜெசீஸ் மெட்ரிக் பிரசாந்த் முதலிடம்; கே.எஸ்.சி., பள்ளி கேசவன் 2ம் இடம்; பி.வி.கே.என்., பள்ளி கதிர் 3ம் இடம். குண்டு எறிதலில், சுப்பையா பள்ளி விக்னேஷ் கந்தவேல் முதலிடம்; இடுவாய் அரசு பள்ளி ஆல்பின் 2ம் இடம். கே.எஸ்.சி., பள்ளி ஸ்ரீதர் 3ம் இடம் பிடித்தனர். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் மகுடபதி, பரிசுகளை வழங்கினார்.