உள்ளூர் செய்திகள்

பள்ளிகள் இன்று திறப்பு பாதுகாப்பு குறித்து ஆய்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் பெய்த கன மழையால், எட்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. கலெக்டர் உத்தரவுப்படி பள்ளிகளில் மின்கசிவு உள்ளிட்ட பாதுகாப்பு பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன. புதுச்சேரி, காரைக்காலில் பெய்த கன மழையால், கடந்த நவம்பரில் மூன்று நாட்கள், கடந்த 1ம் தேதி முதல் ஐந்து நாட்கள் என, எட்டு நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது. மழை குறைந்த நிலையில் இன்று (8 ம் தேதி) முதல் புதுச்சேரியில் பள்ளிகள் வழக்கமாக இயங்கும் என கல்வித்துறை அமைச்சர் தியாகராஜன் அறிவித்துள்ளார். புதுச்சேரி மற்றும் கிராமங்களில் உள்ள பல பள்ளிகளில், மழையால் பாதித்தவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். மேலும், சில பள்ளிகளில் மழை நீர் தேங்கியும், உட்புகுந்தும் இருந்தது. இந்நிலையில், பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. பள்ளிகளில் மழைநீர் வடிய வைத்து, சுகாதார வசதிகளை செய்ய வேண்டும். ஈரப்பதம் காரணமாக மின்சாரம் பாயாமல் இருக்க, மின்துறை மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என கல்வித் துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் மணிகண்டன் உத்தர விட்டிருந்தார். நேற்று அனைத்து பள்ளிகளிலும் துாய்மை படுத்தும் பணி நடந்தது. கட்டடத்தின் தன்மை, ஈரப்பதம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. கல்வித்துறை அதிகாரிகள் ஒவ்வொரு பள்ளியாக சென்று, பணிகள் நடந்துள்ளதா என ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்