உள்ளூர் செய்திகள்

மாநில சிலம்ப போட்டி; திண்டுக்கல் வீராங்கனை வெற்றி

திண்டுக்கல்: மாநில அளவிலான சிலம்ப போட்டியில் திண்டுக்கல்லைச் சேர்ந்த வீராங்கனை பூஜா தங்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.திண்டுக்கல் மங்களபுரத்தை சேர்ந்த பொறியியல் கல்லுாரி மாணவி பூஜா. திருச்சியிலுள்ள கேர் பொறியியல் கல்லுாரியில் பி.ஆர்க்., 2ம் ஆண்டு படித்து வருகிறார். தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம், திருச்சி மாவட்ட சிலம்பாட்ட கழகம், பெல் நிறுவனம் சார்பில், திருச்சியில் மாநில அளவிலான சிலம்ப போட்டி நடந்தது. இதில் மாணவி பூஜா பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார்.மாவட்ட சிலம்பம் கழகத்தின் தலைவர் சுந்தரராஜன், துணைத் தலைவர் ரத்தினம், சிலம்பாட்ட கழக உதவி செயலாளர் துரை உள்ளிட்ட நிர்வாகிகள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்