வி.விடுதி, பள்ளிகளில் சேர மாணவ, மாணவிகள் ஆர்வம்
சிவகங்கை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் விளையாட்டு பள்ளி மற்றும் விடுதிகளில் 2016 - 17ம் ஆண்டிற்கு மாணவர், மாணவியர் சேர்க்கைக்கான தகுதி தேர்வு போட்டி சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது. மாவட்ட விளயாட்டு அலுவலர் ராமசுப்பிரமணியன் தேர்வை துவக்கி வைத்தார். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 84 மாணவர்களும், 10 மாணவிகளும் பங்கேற்றனர். அவர்களுக்கு தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, வாலிபால், பளு துõக்குதல், நீச்சல், ஜிம்னாஸ்டிக், கபடி ஆகிய போட்டிகள் நடத்தி, திறமைக்கேற்ப மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. தேர்ச்சி பெறுவோர் மே 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் மாநில தேர்வுக்கு தகுதி பெறுவர். அதில் தேர்வு செய்யப்படுவோர் மதிப்பெண் அடிப்படையில் கவுன்சிலிங் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள விளையாட்டு பள்ளிகள் மற்றும் விடுதிகளில் உள்ள காலி இடங்களுக்கு ஏற்ப சேர்ந்து கொள்ளலாம்.