உள் கட்டமைப்பு வசதிக்காக விருது; பி.எஸ்.ஆர்.இன்ஜி., கல்லூரி
சிவகாசி பி.எஸ்.ஆர். இன்ஜினியரிங்கல்லுாரி, பி.எஸ்.ராமசாமி தெலுங்கு சிறுபான்மை கல்வி அறக்கட்டளையால் 1999ல் தொடங்கப்பட்டது. பி.எஸ்.ஆர். மகளிர் இன்ஜியரிங் கல்லுாரி, பி.எஸ்.ஆர்.பாலிடெக்னிக்கல்லுாரி, பி.எஸ்.ஆர். கல்வியியல் கல்லுாரி ஆகிய கல்வி நிறுவனங்கள் இந்த அறக்கட்டளையின் கீழ் சிறப்பாக இயங்கி வருகின்றன. இக்கல்லுாரிக்கு தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினரின் (நாக்) தேசிய தர மதிப்பீட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தன்னாட்சி அந்தஸ்தையும் வழங்கி உள்ளது. தாளாளர் சோலைச்சாமிக்கு தென் தமிழகத்தின் மிகச்சிறந்த கல்வி உள் கட்டமைப்புகளை கொண்ட கல்லுாரி என்ற விருதை குஜராத் அரசு வழங்கி உள்ளது. 25க்கு மேற்பட்ட பேராசிரியர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். 45 பேர்முனைவர் பட்டம் பயில்கின்றனர். 102 முதுகலை பட்டம் பெற்ற பேராசிரியர்கள் போன்ற தரமான பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர். கடந்த ஆண்டு பல்கலை அளவில் 42 மாணவர்கள் ரேங்க் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு கல்லுாரி வளாகத்தில் தேசிய சர்வதேச கருத்தரங்குகள் நடத்த கல்லுாரி நிர்வாகம் 25 லட்சத்திற்கும் அதிகமாக நிதி வழங்கி உள்ளது. கம்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங் துறைகளை ஆய்வக மையமாக அண்ணாபல்கலைக்கழகம் அங்கீகரித்துள்ளது. கல்லுாரி எம்.டி.ஏ.வி, நேட்டிவ்லீடு, டி.சி.எஸ்., பி.எஸ்.என்.எல்., ஐ.சி.டி.ஏ.சி.கி., முதலிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களில் தொழில்நுட்பங்களை படிக்கும் போதே தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. டி.சி.எஸ்., சி.டி.எஸ்., இன்போசிஸ்., டெக்மகேந்திரா, விப்ரோ டெக்னாலஜி, ஐ.எப். பி., எச்.சி.எல்., உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களில், வளாகத்தேரவு மூலம், 689 மாணவர்களுக்கு பனி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. அரசு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தின் கீழ் 3 மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்கிறது. கிராம மாணவர்களுக்கு சர்வதேச தரத்தில் ஒழுக்கத்துடன் கூடிய படிப்பை வழங்கி வருகிறது.